இந்தியா

இராமேஸ்வர மீனவர்களின் முடிவு

வழக்கம்போல ஜூன் 15ம் தேதி அன்றே மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதாக மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழித்துறையும் முடங்கியுள்ளன. இதற்கு மீன்பிடித் தொழிலும் விதிவிலக்கல்ல. கடந்த மார்ச் முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் ஏப்ரல் 14 முதல், ஜூன் 15 வரையிலான மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் முன்னரே மீன்பிடிக்க செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில், மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், ஜூன் 1 முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம், என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார் நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி உபகரணங்களைத் தயார் செய்துகொண்ட பின்னர் யூன்15ம் தேதி வழக்கம் போல் கடலுக்குச் செல்வதென முடிவு செய்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க