பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாசவுக்கும், சம்பந்தனுக்குமிடையில் நேற்றிரவு (21) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை சஜித் கோரினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சம்பந்தனை அவசரமாக சந்திப்பதற்கு ரணில் தயாராகிவருகிறார் எனக் கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க