உள்நாட்டு செய்திகள்புதியவை

சவேந்திர சில்வா நியமனம்: மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்

சவேந்திர சில்வாவின் தலைமையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது।

இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்। அரசாங்கம் அதனைச் புறக்கணிக்கும் பட்சத்தில் ஐ। நாடுகள் சபை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது।

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது।

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கிறது।

எனவே உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது।

கருத்து தெரிவிக்க