இலங்கை மற்றும் தென் கொரிய அரசாங்கங்கள் இன்று (ஆகஸ்ட் 21) நாட்டின் மீன்வளத்துறையை முன்னேற்ற 5 மில்லியன் அமெரிக்க
டொலர் மானியத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன்படி, குறித்த நிதி கல்பிட்டியில் உள்ள கடல் ஆராய்ச்சி மையத்தை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும்,எனவும் இதனை இரு நாடுகளும் நிர்வகிக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி தெரிவித்தார்.
இதேவேளை ஆழமான கடல்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு தென்கொரியா ஒரு அதிநவீன ஆராய்ச்சி கப்பலை நன்கொடையாக வழங்குவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க