அழகு / ஆரோக்கியம்

புதினாக்கீரையில் உள்ள அளவற்ற நன்மைகள் !

உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தருகின்ற ஓர் அற்புத மூலிகை புதினா.  ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ள புதினாவை ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர். பிரதான சத்துக்களைக் கொண்டிருக்கும் புதினாவை அன்றாடம் நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தண்ணீரினால் ஏற்படும் தொற்று நோய்கள், நெஞ்சு எரிச்சல் போன்றவற்றுக்கு உகந்தது.

சளி, இருமல், மூக்கடைப்பு ஆகியவற்றுக்கும்  அருமருந்தாகும்.

மலச்சிக்கல் நீங்கும். புதினா சாறுடன் தேன், தேசிப்புளி கலந்து சாப்பிட்டால் வாய்வு தொல்லை நீங்கும்.

அதிக கொழுப்பைக் கரைப்பதுடன்  உடற்பருமனைக் குறைக்கிறது. இதன் சாற்றினை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

புதினாவை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

கருத்து தெரிவிக்க