இலங்கையில் செய்தித்தாள்களின் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது
2018ஆம் ஆண்டு தரவுகளின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் 2016இல் 411.8 மில்லியன் செய்தித்தாள்கள் விற்பனையாகின.
அது 2017இல் 398.7 மில்லியன்களாக இருந்தது.பின்னர் 2018இல் இந்த விற்பனை 368 மில்லியன்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
வாராந்த செய்தித்தாள்களின் விநியோகம் மற்றும் விற்பனையும் 2017இல் 136 மில்லியன்களாக இருந்து 2018இல் 113.3 மில்லியன்களாக குறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் சிங்கள நாளிதழ்களின் விற்பனையிலேயே அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 11.2 வீதமாகும்.
எனினும் தமிழ் நாளிதழ்களின் விற்பனை 0.5 வீதத்தாலேயே குறைவடைந்துள்ளது. ஆங்கில செய்தித்தாள்களின் வீழ்ச்சி 3வீதமாக உள்ளது.
சமூக ஊடகங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் இந்தியா, ஜப்பான் அமரிக்கா உட்பட்ட நாடுகளிலும் செய்தித்தாள் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க