உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபய தொடர்பில் விசாரணை வேண்டும்- தேர்தல்கள் கண்காணிப்பகம்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தேர்தல்கள் கண்காணிப்புக்குழுவான சிஎம்இவி [ CMEV]அமைப்பு கோரியுள்ளது.

இந்தக்குற்றச்சாட்டை சிங்கள நாளிதழின் ஆசிரியர் ஒருவர் முன்வைத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச அமரிக்க பிரஜாவுரிமையை கொண்டிருந்தநிலையில் அவர் தமது வாக்கை ஹம்பாந்தோட்டையில் செலுத்தியுள்ளார்.

இது அரசியலமைப்புக்கு முரணான செயல்.எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு அமரிக்க பிரஜாவுரிமையை பெற்ற கோட்டாபய, 2005 செப்டம்பர் 5ஆம் திகதி சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்தார்.

இந்தநிலையிலேயே அவர் தமது வாக்கை செலுத்தியதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க