உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொரிய தொழிற்பயிற்சி நிலையம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு

கொரிய தொழில்நுட்ப தொழிற்பயிற்சி மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்காக 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக பிதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.

அரச தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் மிகப்பெரிய தொழிற்பயிற்சி நிலையமாக இது அமையவுள்ளது.

நெனோ தொழில்நுட்பம், றோபோ நுட்பம் போன்ற நவீன பாடங்களைப் போதிக்கும் மையமாக இது அமையவுள்ளது. 700ற்கும் மேற்பட்ட மாணவர்களை இங்கு சேர்த்துக் கொள்ளலாம்.

எனினும், பகுதிநேர வாராந்த பயிற்சிப் பாடநெறிகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம்.

உள்நாட்டு தொழிற்பயிற்சித் துறையில் இந்த மத்திய நிலையம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதார சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க