அழகு / ஆரோக்கியம்

தோலுக்கு நன்மை பயக்கும் சில பழங்கள் !

ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாப்பதில் சில பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும் அப்பிள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். அத்துடன் சருமம் உலர்ந்து போகாமல் தடுக்கும். பளபளப்பாகவும் இருக்கும்.

ஆரோக்கியமான சருமத்திற்கு அத்தியாவசியமானது பப்பாசிப்பழம். இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தோடம்பழத்தில் விற்றமின் சி நிறைய உள்ளது. இது சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். தோல் பொலிவுடன் காணப்படும்.

வாழைப்பழம் சருமம் உலர்ந்து போகாமல் தடுக்கும். ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். சருமம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க உதவும்.

மாதுளம் பழம் சருமம் பொலிவோடும் , இளமைத் தோற்றத்தோடும் இருக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தைப் போக்கி வயதான தோற்றத்தை தடுக்கும்.

திராட்சை பழமும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தை தடுக்கும். புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.

கொய்யாப்பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன. தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வர வயதான தோற்றத்தை தடுக்கும். அத்துடன் முகப்பரு தொல்லையில் இருந்தும் பாதுகாக்கும்.

கருத்து தெரிவிக்க