நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கம்பஹாவில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைவர் மற்றும் கட்சி கொள்கைகள் இருப்பதாகக் கூறிய அவர் , அதற்கு ஏற்ப வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று கூறினார்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசிய கட்சி பொருத்தமற்ற நபரை வேட்பாளராக நியமித்தால், எதிரணி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் எனசுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ஷ நாட்டை ஆளக்கூடியவர் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று முன்னாள் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
கோத்தபாய தனது ஆதரவாளர்களின் வாக்குகளைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய பொன்சேகா, மிதக்கும் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்று கூறினார்.
கருத்து தெரிவிக்க