ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து பேசுகையிலேயே பிரதமர் அஷ்ரப் கனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘காபூல் திருமண சம்பவம் மிகவும் கொடூரமான ஒன்றாகும். உயிரிழந்த மக்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்பதை உறுதியாக கூறுகிறேன்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியின் மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புதான் காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க