ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக மேடையில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்து கொண்டிருந்தனர். திடீரென மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் இளைஞர்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
எனினும், அதிகாரப்பூர்வ தகவலை அதிகாரிகள் இன்று நண்பகலுக்கு மேல் வெளியிடலாம் என கூறப்பட்டது. இதனிடையே பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
180 பேர் காயமடைந்து உள்ளனர். தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலீபான் அமைப்பு மறுத்துள்ளது. வேறு எந்த குழுவினரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
கருத்து தெரிவிக்க