வெளிநாட்டு செய்திகள்

கிரீன்­லாந்தை சொந்தமாக்க விரும்பும் ட்ரம்ப்

டென்மார்க் நாட்­டி­ட­மி­ருந்து கிரீன்­லாந்தை விலைக்கு வாங்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக வோல் ஸ் ரீட் ஜேர்னல் செய்தி நிறு­வனம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ட்ரம்ப் அடுத்த மாதம் டென்மார்க் செல்­ல­வுள்ள நிலை­யிலே இந்த செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

எனினும் இந்த விருப்பத்தை நிராகரித்துள்ள கிரீன்லாந்து அரசாங்கம் ‘நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல.’ என்று கூறியுள்ளது.

முற்­றிலும் பனிப்­பி­ர­தே­ச­மான கிரீன்­லாந்து தீவு டென்­மார்க்கின் ஒரு தன்­னாட்சி பிர­தே­ச­மாகும்.

8 இலட்­சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அள­வி­லான பரப்பை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த தீவு காணப்­ப­டு­கின்­றது.

கருத்து தெரிவிக்க