உலகம்

ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன இராணுவ தளபதி

சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டங்களினால் ஹொங்கொங்கில் மீண்டும் பதற்ற நிலையும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், சீன இராணுவத்தின் தளபதி சென்டாவோ ஜியாங், ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

சீனாவின் புதிய, மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிவில் உரிமைகளிற்கும், அரசியல் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே சீன இராணுவ தளபதி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஹொங்கொங்கின் தேசிய இறைமையையும் அபிவிருத்தி நலன்களையும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரத் தன்மையையும் பாதுகாப்பது குறித்து, அதிகாரிகளும் படையினரும் உறுதி பூண்டுள்ளனர் என்றும் இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு சட்டம் முதற் தடவையாக ஹொங்கொங்கில் செயற்படுவதற்கு , சீன படையினர் அனுமதித்துள்ளதால் அச்ச நிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால் சீன படையினர் வீதிகளில் இறங்கலாம் என்ற அச்சம் ஹொங்கொங்கில் நிலவுகிறது. சீனாவின் உத்தேச சட்டத்திற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க