உலகம்

முழங்காலால் கழுத்தை நெரித்த பொலிஸ்: கறுப்பினத்தை சேர்ந்தவர் பலி

அமெரிக்காவின் மினொசொட்டாவில் , அமெரிக்க காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கழுத்தை தனது முழங்காலால் மிதித்த காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிருக்கு போராடி கதறிய அந்த நபர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது‌. கறுப்பின நபர் உயிரிழந்த பகுதியில் பலர் முகக் கவசங்களை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து பொலிஸ் அலுவலகத்தை நோக்கி சென்று அங்கு ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு பொலிசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க