எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை முழுவதுமான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச மருத்துவு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்
வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்;த வாரத்தில் எந்தவொரு நாளிலும் தொடங்கவுள்ளோம். அதற்கான அதிகாரபூர்வமான திகதி எதிர்வரும் திங்கட்கிழமை (19) அறிவிக்கப்படும்.
குறிப்பாக மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை சட்டபூர்வமாக்க தவறியமை மற்றும் மருத்துவர்களுக்கான சேவை நிமிடத்தை திருத்துவது போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாகவே இவ்வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்த போதிலும் அதிகாரிகள் அது தொடர்பில் பாராமுகமாகவே செயற்படுகின்றனர். எனவே இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமானது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளது.
மேலும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து இலங்கை தீவு முழுவதும் காணப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் பதாதைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் டாக்டர் அலுத்கே தெரிவித்தார்.
மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை அமுல்படுத்தத் தவறியதன் விளைவாக தகுதியற்ற மருத்துவ அதிகாரிகள் பயிற்சிபெற வாய்ப்பு அளிக்கப்படும் ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை சட்டமாக்குவதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அரச மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டத்;தின் போதே வேலைநிறுத்தப் போராட்டத்திற்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க