உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வடக்குகிழக்கு பெண்களின் பிரச்சினை தொடர்பில் மனு கையளிப்பு

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் தீர்வினை கோரி மீள் குடியேற்ற வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலர் சிவஞானசோதியிடம் இன்று காலை மனு கையளிக்கப்பட்டது.

விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் “நிலைமாறு கால நீதிக்காய் எங்களின் குரல்கள்” எனும் தொனிப்பொருளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அன்றாட பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள லக்சுமி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போர் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான மனுவை விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சி.கோமதி மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் சிவனான சோதிடம் கையளித்தார்.

காணி பிரச்சனை,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை,சமூகத்தில் பெண்கள எதிர்நோக்கும் சவால்கள்,மார்ருத்திரனாளிகள் பிரச்சனை,முன்னாள் போராளிகளின் பிரச்சனைகள் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இனியும் காலம் தாமதிக்காது இனியாவது விரைந்து தீர்வினை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மகஜர் ஊடாக விடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண பெண்களின் சமாஷ பிரதிநிதிகள்,மாவட்ட சமாஷ உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்கள்,மாதர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க