உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘கொழும்பில் குப்பை சேகரிக்க கட்டணம் வசூலிக்கும் திட்டம்’

வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் நடைமுறைக்கு வரும் என்று கொழும்பு நகர பிதா பாலித நாணயக்கார தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

ஏற்கனவே வணிகங்கள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து 40 லிட்டர் அளவிலான கழிவு வாளிக்கு ரூ .100 கட்டணம் குப்பை சேகரிப்பதற்காக வசூலிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த நிதி கொழும்பிலிருந்து குப்பைகளை அருவக்காலு  பகுதிக்கு கொண்டு செல்ல பயன்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாரவூர்திகளுக்கு பதிலாக குப்பைகளை தொடரூந்துகளில் கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக நகராட்சி அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க