உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பு – ஹங்வெல்ல வீதியில் போக்குவரத்து தடை

நவகமுவ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹரா காரணமாக கொழும்பு – ஹங்வெல்ல வீதியில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த சாலையில் இன்று (ஆகஸ்ட் 17) இரவு 10 மணி முதல் 1 மணி வரையும், நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.

இந்த காலப்பகுதியில் ஊர்வலம் வீதிகளில் அணிவகுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க