தெற்கு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அடுத்து என்ன நடைபெறும் என்பதை ஊகிக்க முடியாமல் அரசியல் ஆய்வாளர்களே திண்டாடிவருகின்றனர். மறுபுறத்தில் சர்வதேச சமூகமும் திரைமறைவில் இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தலில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் இலங்கை அரசியலில் அதிரடி மாற்றமொன்று நிகழவுள்ளது என்றும், சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகிவிட்டார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் உலாவருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கதவடைப்பு செய்யுமானால் அவருக்கு வாய்ப்பளிப்பதற்கு சுதந்திரக்கட்சி தயாராகவே இருக்கின்றது. இதன்ஓர் அங்கமாகவே சஜித் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், நாட்டை மீண்டும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளும் வகையிலான முடிவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கமாட்டார் என்று சுதந்திரக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அரசியல் பிரமுகர்களும் கட்சிகளின் நகர்வுகள் குறித்து கழுகுப்பார்வையைச் செலுத்திவருகின்றனர்.
மார்ச்சில் பொதுத் தேர்தல்
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரு கட்சிகளில் எந்தகட்சி வெற்றிபெற்றாலும் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க