உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

‘எமது மக்களுக்கான உற்பத்தியை அவர்களே மேற்கொள்ள முடியும்’

இனிவரும் காலத்தில் வடக்கிலுள்ள 1.3 மில்லியன் மக்கள் தமக்கு கீழேயுள்ள 19 மில்லியன் மக்களுக்கு உற்பத்தியாளர்களாக இருக்கப் போகின்றார்கள் என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (வியாழக்கிழமை) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு கூறினார்.

நாம் இன்னும் கரையோர மீன்பிடியையே அதிகளவு மேற்கொண்டு வருகின்றோம். ஆழ்கடல் மீன் பிடியிலும் ஈடுபடுகின்றோம். ஆனால் சர்வதேச மீன்பிடியினைப் பற்றி சிந்தித்ததே இல்லை. எமது வரலாற்றில் 1982இல் இலங்கையின் 42 சதவீத மீன்பிடி உற்பத்திகள் வடக்கு கிழக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதன் மூலம் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இடைச்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்த முடியும்.

இனிமேல் வடக்கு மாகாணத்திலுள்ள 1.3 மில்லியன் மக்கள் அவர்களுக்கு கீழேயுள்ள 19 மில்லியன் மக்களுக்கு உற்பத்தியாளராகவும் விநியோகஸ்தர்களாகவும் இருக்கப் போகின்றார்கள். இதன் மூலம் இடைச்சார்பு பொருளாதார நிலைமை உருவாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க