விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் போட்டி: முன்னணியில் இலங்கை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் நேற்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று 227 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 267 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 18 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கருத்து தெரிவிக்க