பொதுவாக சிலருக்கு தோல் ஒவ்வாமை ஏற்படும். இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும். அழகு சாதன பொருட்கள், உணவு வகைகள், போன்றவற்றுடன் சில தாவரங்களினாலும் ஒவ்வாமை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்த இயலும் .
உங்கள் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
பேக்கிங் சோடா தோல் அரிப்பு, வெடிப்பு, வீக்கத்தை நோக்கும்.
ஒலிவ் எண்ணெயை ஒவ்வாமையை ஏற்பட்ட இடத்தில் பூசினால் குணமாகும். மேலும் இந்த எண்ணெயுடன் சிறிது தேன் கலந்து தோலில் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசினால் மறைந்து விடும்.
தோலில் ஏற்படும் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை வேம்புக்கு உள்ளது. தோலில் அரிப்பு, வீக்கம் எரிச்சல் இருந்தால் வேப்பம் இலையை அரைத்து பூசலாம்.
கொத்தமல்லி இலையையும் பாதிப்பு ஏற்பட்ட கருத்து அரைத்து பூச குணமாகும்.
கற்றாழையும் ஒவ்வாமைக்கு சிறந்த மருந்தாகும். தோலில் தடிப்பு, வீக்கம் ஏற்பட்டு இடத்தில் பூசினால் குணமாகும்.
கருத்து தெரிவிக்க