உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதானியான மொஹமட் ஸஹ்ரானின் மனைவி இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய சாட்சியத்தை வழங்கினார்.
ஸஹ்ரான் மற்றும் ஒரு தற்கொலையாளியான இல்ஹாம் அஹமட் ஆகியோரின் சாட்சி விசாரணையின்போதே இந்த இரகசிய சாட்சியம் வழங்கப்பட்டது.
இந்த இருவரும் சங்க்ரிலா விருந்தக தாக்குதலின்போது மரணமானார்கள்.
இதேவேளை இன்று ஸஹ்ரானின் 4வயது மகளும் சாட்சி விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் தற்கொலையாளிகளான இரண்டு சகோதரர்களின் தந்தையும் இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.
கருத்து தெரிவிக்க