உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கொலைகளுக்கு சாட்சியம் இல்லை’

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் கொலை இடம்பெற்ற மகேஸ்வரன் மற்றும் ரவிராஜ் போன்றவர்களின் கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கு போதிய சாட்சியம் இன்மையால் அவை தீர்வு காண முடியாத ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரிவுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க