உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பில் பாதாள குழு உறுப்பினர் உட்பட இருவர் கொலை

கொழும்பு, மாதம்பிட்டிய பகுதியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இருந்தே குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டவரில் ஒருவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் அனுமாலு ரங்கா (39) என காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மற்றவர் 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க