ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கிராம பாதுகாப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராம பாதுகாப்பு செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.டி.கமல் பத்மஸ்ரீ கலந்து கொண்டு இச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.
வியாழக்கிழமை மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலகங்களிலுள்ள 131 கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து பிரதேச செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் கிராம சேவகர்கள் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாதுகாப்பு படையினர் சிவில் சமுக பிரதிநிதிகள் இவ்விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேநேரம் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள கிராம சேவகர்களுக்கான பயிற்சி நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்பு சகல கிராமங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் செயற்பாடு 1036 கிராம சேவக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க