உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

முதல் நாள் போட்டியில் 203 ஓட்டங்களை பெற்றது நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை குவித்துள்ளது.

இன்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிவர 66.2 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 198 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன் போது ரோஸ் டெய்லர் 82 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மழைக்கு பின்னரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 68 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 203 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து  அணியானது இலங்கை  அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கருத்து தெரிவிக்க