கட்சியின் பெரும்பான்மை ஆதரவு நபர் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களின் மற்றும் ஆதரவாளர்களது நிலைப்பாட்டை புறக்கணிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியினர் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்ற போடும் அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாதுள்ளது.
இந்நிலையிலே கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க