உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கு தேவையான அரசாங்க செலவீனங்களை ஈடுசெய்வதற்கான இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2020ம் ஆண்டுக்கான வரவு செலவு செலவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் காலாண்டில் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு தேவையான செலவீனம் உள்ளிட்டவற்றின் நிலையான கணக்கை பேணுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்தது.

2018 இலக்கம் 35 நிதிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்தது.

இலங்கைக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியது.

சுற்றுலா துறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க