வெளிநாட்டு செய்திகள்

போராட்டக்காரர்களை எச்சரிக்கும் ஹொங்கொங் நிர்வாக தலைவர்

போராட்டம் மூலமாக ஹொங்கொங் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த பிரேரணைக்கு எதிரான போராட்டம் 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் அவர் இவாறு தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள்.

உங்கள் போராட்டம் மூலம் இந்த நகரத்தை மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளிவிடாதீர்கள்.

இந்த நகரத்தை படுகுழியில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கை பாதுகாப்பாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குடன் அமைதியாகவும் வழிநடத்துவதே எனது பணியாகும்’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

எனினும் போராட்டக்காரர்களின் முக்கியக்கோரிக்கையான கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த பிரேரணையை இரத்து செய்யும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க