ரஷ்யா-சீனா இடையேயான நட்புறவு இதுவரை இல்லாத அளவில் மிகச்சிறப்பாக உள்ளது என சீனாவின் கலாசாரத் துறை பிரதி அமைச்சர் ஷாங் சு தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் ரஷ்யா-சீனா இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையார்டும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே தற்போது நல்ல தலைவர்களை பெற்றுள்ளது.
ரஷ்யா-சீனா உறவு முன்பு இருந்ததை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது” என்றார்.
2019-ம் ஆண்டுடன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கும் பீஜிங்கிற்குமான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க