திருகோணமலையில் கொவிட் 19 காரணமாக சமுர்த்தி பயனளார்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டம் முன்னெடுக்கப்படடடிருந்து. அதில், அரச ஊழியர்கள் சிலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய அவர் அரசாங்க அதிபருக்கு அறிவித்ததையடுத்து, அரசாங்க அதிபர் மாவட்ட உள்ளக பிரிவுக்கு இதுபற்றி விசாரணைகளை முன்னெடுக்க பணித்துள்ளார். அத்துடன், இதில் சம்பந்தப்பட்ட கிண்ணியா பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க