வவுனியா நகரசபையின் சுயாதீன தன்மையினை உறுதிப்படுத்துமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் இன்று மதியம் நகரபையை அண்மித்த பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
வவுனியா நகரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் தினச்சந்தைக்கு அருகே அமைக்கப்பட்ட மூன்று மாடி வியாபார நிலையம் நகரசபையின் சட்டத்திற்கு அமைவாக செயலாளரினால் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்து ஆரம்பத்தில் நகரசபையின் நடவடிக்கையினால் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து நகரசபை அறிவுறுத்தல் கடிதம் ஒன்று அங்கு ஒட்டப்பட்டிருந்தது பின்னர் நகரசபையை தவிசாளர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தற்போது அவ்வியாபார நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒட்டப்பட்ட நகரசபையின் தடை செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தல் புறந்தள்ளப்பட்டுள்ளது.
அவ்வியாபார நிலையம் திறக்கப்படுவதற்கு நகரசபை தவிசாளர் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் தொடர்புபட்டுள்ள நகரசபை அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து நகரசபை தவிசாளர் இ. கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த வியாபார நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டதால் எவ்விதமான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க முடியவில்லை.
தற்போது அவ்வியாபார நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருன்றன.
நிச்சயமாக அவ்வியாபார நிலையம் தடை செய்ய என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க