உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘குறுந்திரைப்படம் தயாரிப்பதற்கான பயிற்சிப் பட்டறை’

சமகால வாழ்க்கைப் போக்கில் பெற்றோர் பிள்ளைகள் உறவு முறையின் வகிபாகம் எவ்வாறுள்ள என்பது பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குறுந்திரைப்படம் தயாரிப்பதற்கான பயிற்சிப் பட்டறை இடம்பெற்று வருகின்றது.

இதனை தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளரும் கலைஞருமான வளவியலாளர் கிங்ஸ்லி இராஜநாயகம் தெரிவித்தார்.

மட்டு. மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் சமூகத் தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நுண்கலை கலைக் கழகத்தினால் குறுந் திரைப்படம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி  [13.08.2019] இன்று மட்டக்களப்பு கத்தோலிக்க மண்டபத்தில் இடம்பெற்றது.

கிறிஸ்தவ அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக கலைக்கோட்டன் எஸ். இருதயநாதன், குறும்பட இயக்குனர் அலோசியஸ், தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளரும் கலைஞருமான வளவியலாளர் கிங்ஸ்லி இராஜநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நெறிகளை வழங்கினர்.

மட்டக்களப்பு மறை மாவட்டத்திலுள்ள பங்குப் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றினர்.

இளைஞர்களிடையே ஆக்கத் திறன், சிந்தனா சக்தி, மாற்றுத் தீர்வு விடயங்களில் அவர்களது கொள்ளவை வளர்த்தல், சமூகத்தில் இடம்பெறும் விவகாரங்களை காலத்தின் கண்ணாடியாக வெளிக்கொண்டுவருதல் உள்ளிட்ட விடயதானங்களில் இப்பயிற்சிநெறி வழங்கப்பட்டு வருவதாக வளவ6pயலாளரும் செயற்பாட்டாளருமான கிங்ஸ்லி இராஜநாயகம் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் காலங்களில் மறை மாவட்ட ரீதியில் நடாத்தப்படும் குறுந் திரைப்பட போட்டிகளில் சிறந்த படைப்பாற்றல்களை வெளிக்கொண்டுவருவதற்கான முன்னேற்பாடாகவும் இப்பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலைய இயக்குநர் அடிகளார் ஆர்.ரீ. பிரசன்னா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கிறிஸ்தவ கலாசார இணைப்பாளர் ரேகா ஜோசெப் உள்ளிட்ட இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க