உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘மஸ்கெலிய-மொக்கா தோட்டப்பாதை அடிக்கல் நாட்டு ம் நிகழ்வு’

மஸ்கெலிய – மொக்கா தோட்டத்திற்க்கு செல்லும் சுமார் .75  கி .மீ  பாதை  விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் திரு.வீ .இராதாகிருஷ்ணன் அவர்களின் 20 இலட்சம் ரூபா‌ய்  நிதி ஒதுக்கீட்டில் சீர் செய்வதற்கான  அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த [12 /08 / 2019] இன்று  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் திரு .புஷ்பராஜ்  மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் இரவீந்திரராஜா  நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் இரவீந்திரராஜா, அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கருது தெரிவிக்கையில்..

மிகவும் பின்தங்கிய பிரதேசமாகிய மொக்கா தோட்டத்திற்கு மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்க்கொள்ளவுள்ளதாக  கடந்த மாதம்  அமைச்சர் திகாம்பரத்தின் பத்து இலட்சம் ரூபாய் செலவில் மொக்கா விளையாட்டு மைதானத்தை  சீர் செய்து கொடுக்கப்பட்டது.

மேலும்,  இது போன்று மஸ்கெலிய பகுதியில் உள்ள சகல பின் தங்கிய பகுதிகளிலும்  தனது வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க படவுள்ளதாகவும் அதற்கு கௌரவ அமைச்சர் பழணி திகாம்பரத்தின்  பூரண ஒத்துழைப்பும்  இப்பிரதேச மக்களின் ஒத்துழைப்பும் தேவை என்று  குறிப்பிட்டுள்ளார் .

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டது முதல்  இப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அதற்கு அமைச்சர் திகாம்பரம் அவர்களின் பூரண  ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க