ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை ஆதரவாளர்கள் யாழில் வெடி கொளுத்தி கொண்டாடினர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
இதனையடுத்து கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இணைந்து யாழ் நகரில் வெடி கொளு த்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மலையகத்தில் கண்டி, நுவரெலியா, அட்டன், தலவாக்கலை என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடிகொளு த்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
- இதன்படி, தலவாக்கலை பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் வெடிகொளு த்தி கொண்டாடினர்.
முல்லைத்தீவிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
கருத்து தெரிவிக்க