வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தான் மன்னர் சிலை உடைப்பு:இருவர் கைது

பாகிஸ்தானில் உள்ள மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய இருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ஆம் நூற்றாண்டின்தொடக்கத்தில் ஆட்சி செய்தவர் மன்னர் ரஞ்சித் சிங். இவரது 180-வது பிறந்த தினத்தின் போது லாகூர் துறைமுகத்தில் 9 அடி உயரம் கொண்ட அவரது சிலை திறக்கப்பட்டது.

குதிரை மீது , கையில் வாளுடன் அமர்ந்து இருக்கும் வகையிலான அந்த சிலையை, நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மேற்கூறிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சேதம் செய்யப்பட்ட சிலையை மீண்டும் சீர் செய்வோம் என்று லாகூர் நகர ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க