பொதுமக்களுக்காக முதலாவது புனர்வாழ்வு வைத்தியசாலை மாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறைக்குத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களும் சமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
225 சிறுநீரக இரத்த சுத்திகரிப்புக்கான இயந்திரங்களே முன்னர் இருந்தன. இது தற்போது 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சிங்கப்பூரில் கூட இல்லாத நவீன உபகரணங்கள் இலங்கையில் தற்போது இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க