உள்நாட்டு செய்திகள்புதியவை

மஹிந்தவிற்கு நன்றி சொன்ன கோத்தா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமித்தமைக்கு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவிப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் இறையாண்மையில் கைவைக்க எவருக்கும் இடமளிக போவதில்லை எனவும் இதன் போது அவர் உறுதியளித்துள்ளார்.

திட்டமிட்டபடி பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க