உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வறட்சியால் வவுனியாவில் குடிநீர் தட்டுப்பாடு

வவுனியா மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2166 பேர் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக இம்முறை மழை வீழ்ச்சி மிகக் குறைவாக காணப்பட்டதால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மருதோடை, ஊஞ்சல் கட்டி, வெடிவைத்தகல்லு, நைனாமடு, கற்குளம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஓமந்தை, காத்தார்சின்னக்குளம், மகாரம்பைக்குளம், கள்ளிக்குளம், பம்பைமடு, காத்தான்கோட்டம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 550 பேரும் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1194 பேரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

வர்களுக்கான குடிநீரை பெற்றுக்கொடுக்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அப்பகுதி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க