கெய்லின் கோரிக்கையை மேற்கிந்திய கிரிக்கட் அணி தெரிவுக்குழு நிராகரித்துள்ளது.
உலக கிண்ண போட்டியின் போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்படுவதாக அதிரடி வீரர் 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறியிருந்தார்.
அவர் டெஸ்ட் போட்டி விளையாடி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனினும் அவரது கோரிக்கையை தேர்வு குழுவினர் நிராகரித்துள்ளனர்.
அதே சமயம் அணியில் புதுமுக சுழற்பந்து வீச்சாளராக 26 வயதான ரகீம் கார்ன்வால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர் சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி அதிரடியாக துடுப்பாட்ட கூடியவர் . 55 முதல்தர போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளும், 2,224 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க