உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்! அறிவிப்பு விடுத்தார் மஹிந்த!! (live updates)

* ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவே களமிறங்குவார் என முன்னணியின் புதிய தலைவரான மஹிந்த ராஜபக்ச அறிவித்தார்.

* தமிழ் மக்களை ஏமாற்றாத, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒருவரே எமக்கு ஜனாதிபதியாக  தேவை. அப்படியான ஒருவரையே களமிறக்குவேன்.  

* ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச தற்போது தமிழிழ் உரையாற்றி வருகிறார்.  
*அரசாங்கத்தின் ஆயுட்காலம் விரைவில் முடிவுக்கு வரும். 
*மஹிந்தவின் உரை இடம்பெறுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர், விரைவில் புத்தொளி பிறக்கும் எனவும் தெரிவிப்பு. 
*ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கான யோசனையை பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ் முன்வைத்தார்.

*ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானத்தையும்மீறி மாநாட்டில் எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட சு.க. உறுப்பினர்கள் பங்கேற்பு.

*பொதுஜன பெரமுன மாநாட்டில் மும்மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் மூன்று மொழிகளிலும் இடம்பெறுகின்றன.

*சர்வமத வழிபாட்டுடன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பம்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு  சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

தேசிய மாநாட்டில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமைப் பதவியை ஏற்கவுள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையக உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க