நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் மழையால் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (ஆக. 9) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்கள் மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு, வடமேற்கு, வட மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சீரற்ற வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கணித்துள்ளது.
இதேவேளை கொழும்பு முதல் மன்னார் வரையிலும், கிளிநொச்சி முதல் திருகோணமலை வரையிலான கடல் பகுதியும் அடுத்த சில நாட்களில் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க