உள்நாட்டு செய்திகள்புதியவை

‘கொழும்பின் கழிவுகளை அகற்ற மேலும் 2 நாட்கள் தேவை’

கொழும்பில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இவற்றை அகற்ற இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படும் என கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை கொழும்பில் தேங்கிக் கிடந்த சுமார் 250 தொன்னுக்கும் அதிகளவான குப்பைகள் புத்தளம் அருவக்காடு கழிவுக் கூள முகாமை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளவு எல்லை கடந்த நிலையில் கொழும்பில் தேங்கிக் கிடந்த நிலையில், குப்பைகளை அகற்றும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு நகர சபை கழிவுகளை அகற்றும் பணிகளை நாளை நிறைவடையும் என குறிப்பிடப்பட்ட போதும் முற்றாக அகற்ற இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க