வெளிநாட்டு செய்திகள்

இத்தாலியின் ஸ்பானிஷ் படியில் அமர்பவர்களுக்கு அபராதம்!

ஸ்பானிஷ் வரலாற்று சின்ன படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

‘ஸ்பானிஷ் படிகள்’ உள்பட மேலும் சில உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ‘முகாமிடுதல்’ அல்லது உட்கார்ந்து காணொளி மற்றும் புகைப்படமெடுப்பது உள்ளிட்டவற்றை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு அறிவித்தது.

அதன்படி தற்போது ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி சிறப்பு சுற்றுலா பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை அவர்கள் விசில் அடித்து எச்சரித்து அப்புறப்படுத்துவார்கள்.

அதை மீறியும் அங்கு அமர்ந்து எவரேனும் புகைப்படம் எடுக்க முயன்றால் அவர்கள் மீது விதிகளை மீறியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு 400 யூரோ (இலங்கை பணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்து தெரிவிக்க