உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘எதிர்வரும் தேர்தலில் சரியான முடிவை எடுத்து எனக்கு ஆதரவளியுங்கள் – சஜித் ‘

நவம்பர் மாதத்தில் நீங்கள் சரியான முடிவை எடுத்து எனக்கு ஆதரவை வழங்கினால் பொருளாதார அபிவிருத்தியை அடையமுடியும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்

வவுனியா பாவற்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கலைமகள் நகர் வீட்டுத்திட்டத்தை திறந்துவைத்து  கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.

எனது திட்டம் நோக்கம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகின்றேன். 2025ஆம் ஆண்டு வரும் போது யாவருக்கும் நிலம்இ அனைவருக்கும் வீடுகளையும் வழங்க எதிர்பாரர்கிறோம்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் இருபதாயிரம் வீட்டு திட்டங்களை கட்டிமுடிக்க எதிர்பார்கின்றோம்.

நாடு அபிவிருத்தி அடையவேண்டுமாக இருந்தால் பொருளாதாரத்தில் வளர்சியடையவேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் அதனை அனுபவித்திருக்கமாட்டீர்கள்.

எனவே அதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதியூடான பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் நகரவேண்டும்.

நவம்பர் மாதத்திலே நீங்கள் சரியான முடிவை எடுக்கும் போதுஇ நீங்கள் சரியான முறையிலே எனக்கு ஆதரவை தருவீர்களாக இருந்தால் ஏற்றுமதிதுறையிலே ஒரு சிறந்தபொருளாதார அபிவிருத்தியை நிச்சயமாக நான் ஏற்படுத்துவேன்.

எனவே உங்களது வாக்குகளை சரியான முறையிலே வழங்கினால் சயித்பிரமேசதாசவாகிய நான் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் உயர்திகாட்டுவேன்.

குறிப்பாக நாடாளவியரீதியில் அமைந்துள்ள அனைத்துபிரதேசசெயலககங்களிலும் பாரியளவிலான கைத்தொழில் பேட்டைகளை நாங்கள் உருவாக்கவேண்டும்.

பழவகைகள், மரகறிக்கறிவகைகள், விவசாய உற்பத்திகள் பழுதடையாமல் பாதுகாப்பதுடன்இ அதற்காக கிராமங்கள் தோறும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது அப்பகுதிகளில் காணப்படும் தொழிலற்ற இளைஞர்களிற்கு தொழில்களை நாம் வழங்கமுடியும்.

நாம் திட்டமிட்டபடி அனைத்தையும் மேற்கொள்ளும் போது டொலர்களில் வருமானத்தைபெறக்கூடிய சந்ததியை உருவாக்கமுடியும்.

எனது நோக்கமும் அதுவாகவே காணப்படுகின்றது. உங்களின் கைகளிலே நாட்டின் எதிர்காலம்’ பாரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே அதனை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.  இந்த நாட்டில் வாழக்கூடிய இருநூறு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுடைய அனைத்து பொறுப்புக்களையும் நாம் கையிலெடுத்து உங்களிற்கான அனைத்து வேலைதிட்டங்களையும் மேற்கொள்வாற்கான கடமையை நான் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளேன்.

உங்கள் அனைவரது பிரச்சினைகளையும் மாற்றும் சக்தியாக உங்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வது வேறுயாருமல்ல சஜித் பிரமேதாச ஆகிய நானே.

வவுனியாவிற்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச காத்தார்சின்னகுளம் மற்றும் பாவற்குளம் பகுதிகளில் அமைக்கபட்ட மூன்று வீடமைப்பு திட்டங்களை பொதுமக்களிடத்தில் கையளித்ததுடன் தரணிக்குளம் பகுதியில் அறநெறி பாடசாலை கட்டிடம் ஒன்றினையும் திறந்து வைத்திருந்தார்.

கருத்து தெரிவிக்க