உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘மன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழா தொடர்பில் அவசர கலந்துரையாடல்’

மன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவசர மீளய்வு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட   ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மடு பிரதேசச் செயலாளர்  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படை ஆதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில்,எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள்,குடி நீர்,சுகாதாரம்,மருத்துவம் உற்பட பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனையும்,பாதுகாப்பையும் உறுதி படுத்தும் வகையில் பொலிஸ், இராணுவம், கடற்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மடு திருத்தலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு  முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க