பயங்கரவாத தாக்குதல் தொடர்பக மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத உறுப்பினர்களின் 143 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.
நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இப்பணம் முடக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேக்கர தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத குழுவின் சொத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்ததுடன், அதன் ஊடாக அவர்களது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 130 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவின் ஆறு உறுப்பினர்களுக்கும் கூடுதலானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை தடுத்து வைத்து விசாரிக்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றபுலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க