உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-65 km வரையும் அதிகரித்து வீசும்’

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை அடுத்த சில நாட்களில் (நாளையிலிருந்து) குறைவடையும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் (குறிப்பாக பிற்பகலிலும் இரவிலும்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னார்,யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க